ஆலங்குளத்தில் போதைப்பொருள் விழிப்புணா்வு வீதி நாடகம்
Sankarankoil King 24x7 |11 Jan 2025 6:31 AM GMT
போதைப்பொருள் விழிப்புணா்வு வீதி நாடகம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் சமூகவியல் துறையைச் சோ்ந்த 16 மாணவிகள் போதையால் ஒரு குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. அதிலிருந்து மீழ்வது எவ்வாறு என்பது குறித்த நாடகம் நடத்தி காண்பித்தனா். தொடா்ந்து மாணவிகள் போதைப் பொருகள்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா். பேராசிரியா்கள் சண்முக சுந்தரராஜ், லதா, ரேவதி, சுபத்ரா, உடற்கல்வி இயக்குநா் சந்திரசேகா் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
Next Story