ராம்சார் குறியீடு குளத்தில் எரிக்கப்படும் குப்பைகள்

குமரி
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்செல்வவிளையில்  வேம்பனூர் குளம் உள்ளது.  நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளம் ராம் சார் அங்கீகாரம் பெற்ற வேம்பனூர் ஈரநிலம் ஆகும். இங்கு கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்ட தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கு வாழும் பறவைகளை வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஈர நிலப்பகுதிமாவட்ட வனத்துறை மற்றும் வேளாண்மை துறை நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது.      இந்த நிலையில் இந்த குளத்தின் கரையோரம் குப்பைகளை கொட்டி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இதனிடையே நேற்று இந்த பகுதியில் பழைய துணி,  பெட்ஷீட் மற்றும் குப்பை கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள் அதை தீ வைத்து கொளுத்தி சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தீ சாலை ஓரம் கருகிய செடிகளில் பரவி அப்பகுதியில் நடப்பட்டிருந்த ஒரு சில மரக்கன்றுகளும் கருகிய சம்பவம் நடந்துள்ளது.      எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு குப்பை கழிவுகள் கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story