தூத்துக்குடியில் வைகுண்ட ஏகாதசி விழா!
Thoothukudi King 24x7 |11 Jan 2025 7:32 AM GMT
தூத்துக்குடியில் வைகுண்ட ஏகாதசி விழா: சயன கோலத்தில் பெருாள் பக்தர்களுக்கு காட்சி
தூத்துக்குடியில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சயன கோலத்தில் வைகுண்டபதி பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகுண்ட ஏகாதசி விழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் வைகுண்ட ஏகாதசி விழா எஸ்.வி.எஸ்.கே பஜனை மடத்தில் நடைபெற்றது. இதையொட்டி இன்று காலையில் கோபூைஜை, விசுவரூப தரிசனம் நடந்தது. காலை 4 மணிக்கு சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை பரம பத நாதன் ஸ்ரீ வைகுண்ட நாதர் அலங்காரம் திருக்காட்சி நடைபெறுகிறது
Next Story