திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள வடமலைபவன் கடையில் திடீர் தீ விபத்து!

திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள வடமலைபவன் கடையில் திடீர் தீ விபத்து!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள வடமலைபவன் கடையில் திடீர் தீ விபத்து! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதி சேர்ந்த மாணிக்கம் மகன் சரத் சந்திரன் வயது 63 இவர் திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் வடமலைபவன் என்ற பெயரில் டீக்கடை மற்றும் ஸ்னாக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல இன்று கடையை திறந்துள்ளார். அப்போது சனிக்கிழமையான இன்று காலை 8.40 மணி அளவில் கடையின் மொட்டை மாடியில் உள்ள ஜெனரேட்டரில் மின்கசிவு ஏற்பட்டு தீ தக தகவென எரிய தொடங்கியது. இதனை அறிந்த சரத்சந்திரன் உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் ஜெனரேட்டர் மற்றும் வடமலை பவன் பெயர் பலகை உள்ளிட்டவை எறிந்த நாசமாயின. வேலும் கடையின் மொட்டை மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறவில்லை.
Next Story