ராமநாதபுரம் பள்ளியில் விளையாட்டு விழா பொங்கல் விழா மற்றும் கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |11 Jan 2025 8:26 AM GMT
பரமக்குடியில்37வது விளையாட்டு விழா மற்றும் கலையரங்க திறப்பு விழா மற்றும் பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்புமாக நடைபெற்றது
ராமநாதபுரம் வ உ சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 37வது விளையாட்டு விழா மற்றும் கலையரங்க திறப்பு விழா மற்றும் பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது இவ்விழாவை தலைவர் இருளப்பா பிள்ளை மற்றும் பள்ளியின் தாளாளர் முனியாண்டி பிள்ளை ஆகியோர் தலைமை வகித்தனர் பள்ளியின் பொருளாளர் மகேஸ்வரன் மற்றும் இணைச் செயலாளர் கோவிந்தராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார் பள்ளியில் பிரமாண்டமாக புதிதாக கட்டபட்ட இந்திராணி அம்மையார் அவர்கள் நினைவு கலை அரங்கத்தை துரைப்பாண்டியன் பிள்ளை திறந்து வைத்தார் விளையாட்டு போட்டி யை ஒலி ம்பிக் கொடி ஏற்றி சமாதான புறாவையும் பறக்க விட்டு திருசேதுராமன் அவர்கள் பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் துவக்கி வைத்தனர் பல்வேறு போட்டிகள் பெற்ற அனைவருக்கும் மாவட்ட கல்வி அதிகாரி பரிசுகள் வழங்கினார் விழாவில் பள்ளியின் நிர்வாகிகள் வின்சென்ட் ஜெயக்குமார் சபரி முத்துப்பிள்ளை, லோகநாத முருகன் சபையினுடைய நிர்வாகிகள் குமரேசன் ராமகிருஷ்ணன் பன்னீர்செல்வம் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவின் முடிவில் பள்ளி முதல்வர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாராட்டினார்
Next Story