பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரி சமத்துவப் பொங்கல் விழா

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரி சமத்துவப் பொங்கல் விழா
சிலம்பாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புற நடனம் ,கரகாட்டம், மயிலாட்டம், கும்மி, நாட்டுப்புறப்பாடல்கள் போன்ற தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் செவாலியர் டாக்டர் வரதராஜன் விழாவிற்கு தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். அவர் தனது தலைமை உரையில் பாரம்பரியமிக்க நடனங்களை கற்றலிலும், நிகழ்த்துமுறைகளிலும் கல்லூரி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற அறிவுரையை முன்வைத்தார். பாரம்பரிய உடைகளோடு கூடிய பெருவிழாக்கள் நடத்தப்படுவதே நம் கலாச்சாரப் பண்பாட்டை சீர்குலையாது காக்கும் என்றும் கூறினார். விழாக்களின் நோக்கம் நாம் மகிழ்ச்சியோடு இருப்பதே. ஆனால் அந்த மகிழ்ச்சியும் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். துணைத் தாளாளர் .ஜான் அசோக் வரதராஜன் வாழ்த்துரை வழங்கினார். மகாலட்சுமி வரதராஜன் விழாவை துவக்கி வைத்து சிறப்பித்தார். கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் சிவகுமார், கல்வி இயக்குனர் சத்தீஸ்வரன், தலைமை அலுவலர் ஆனந்தன், கல்லூரி தேர்வு நெறியாளர் முனைவர் சத்ய சீனிவாஸ், கலைப்புல முதன்மையர் முனைவர் மருததுரை , அறிவியல் புல முதன்மையர் முனைவர் மணிமாறன் . துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவின் துவக்கத்தில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் தனலட்சுமி வரவேற்புரை வழங்கினார். விழாவின் தொடக்கத்தில் சிலம்பாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புற நடனம் ,கரகாட்டம், மயிலாட்டம், கும்மி, நாட்டுப்புறப்பாடல்கள் போன்ற தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது. கல்லூரி பேராசிரியர்களுக்கான பாட்டுப்போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, பானை உடைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. துறைகள்தோறும் வரிசையாகப் பொங்கல் வைக்கப்பட்டு, வண்ணக் கோலங்கள் வரைந்து மாணவிகள் சிறப்பித்தனர். விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது . விழாவிற்கான ஏற்பாடுகளை அலுவலக மேலாளர் தாணுப்பிள்ளை தமிழ்த்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர். நிகழ்வுகளை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் செந்தில்நாதன் முனைவர்.மகேஸ்வரி, ஆகியோர் தொகுத்து வழங்க விழா இனிதே நிறைவுற்றது.
Next Story