காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் நகரத்தில் அனைத்து வார்டுகளிலும், அனைத்து பேரூராட்சி, அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் கூடும் இடங்களில் CCTV கேமரா பொருத்திட வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தொடர் திருட்டை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் தொடர் திருட்டை தடுக்க, காவல்துறையை கண்டித்தும், பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதல் காவல் நிலையம் மற்றும் கூடுதல் காவலர்களை நியமிக்கவும், பெரம்பலூர் நகரத்தில் அனைத்து வார்டுகளிலும், அனைத்து பேரூராட்சி, அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் கூடும் இடங்களில் CCTV கேமரா பொருத்திட வேண்டும் என தெரிவித்து, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்தியும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள். N.செல்லதுரை, A.கலையரசி, A.K.ராஜேந்திரன், S.அகஸ்டின், A.ரெங்கநாதன், Dr.C.கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் K.M.சக்திவேல், S.பாஸ்கரன், பெரம்பலூர் நகர செயலாளர் A.இன்பராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் எழுத்தாளர் எட்வின் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story