வேளாண் கல்லூரி - ஆராய்ச்சி மையத்தில்
Nagapattinam King 24x7 |11 Jan 2025 10:48 AM GMT
விவசாயிகள் முன்னிலையில் பொங்கல் விழா
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கல்லூரி முதல்வர் முனைவர் கோ.ரவி தலைமையில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வேளாண் விரிவாக்கத் துறை பேராசிரியர் முனைவர் தாமோதரன் வரவேற்றார். எந்த தொழில் செய்தும் வாழலாம். ஆனால், விவசாயம் செய்தால் தான் உயிர் வாழ முடியும். நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளை அழைத்து, அவர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் முன்னிலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பரிசுகளை வழங்கினர். முடிவில், வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் முனைவர் உஷாராணி நன்றி கூறினார்.
Next Story