விலை நிலங்களில் புதிய வகை நோய் விவசாயிகள் வேதனை
Sivagangai King 24x7 |11 Jan 2025 11:05 AM GMT
சிவகங்கை வட்டம், சிவகங்கை அருகே விளைந்த விளைநிலங்களில் புதிய வகை நோய் தாக்கி பரவி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
சிவகங்கை வட்டம், சிவகங்கை அருகே விளைந்த விளைநிலங்களில் புதிய வகை நோய் தாக்கம் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் சிவகங்கை அருகே மாடகோட்டை, வேம்பங்குடி போன்ற பகுதிகளில் தற்போது விளைச்சல் விளைந்த விளைநிலங்களில் புதிய வகை நோய் பரவி விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது வேளாந்துறை அதிகாரிகள் இதற்கு முன்னெச்சரிக்கையாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தற்போது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறும்போது விளைந்த நெல் பயிர்கள் அனைத்தும் புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகத்திடம் விவசாய அதிகாரிகளிடமும், இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும் இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அவர்கள் நிவாரணம் கொடுக்க மறுத்து வருகின்றனர். எனவே தமிழக அரசு எங்கள் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்
Next Story