அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் விற்ற நபர் கைது

1.ஹான்ஸ் (5.700-கிலோ), 2.விமல் பாக்கு (6.528-கிலோ) மற்றும் 3. V1-பான் மசாலா (4.080-கிலோ) மொத்தம் - 16.308 கிலோ, ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல்
அரசால் தடை செய்யப்பட்ட 16 - கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி இன்று 11.01.2025 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் பெரம்பலூர் உட்கோட்டம் பாடாலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பாடாலூர் கிராமத்தில் ராஜா (47) த/பெ மாணிக்கம், தெற்கு தெரு, பகுதியில் தனக்கு சொந்தமான ராஜா மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையின் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார், மற்றும் அவரது குழுவினர் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி எதிரியை கைது செய்து பாடாலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.கமலி அவர்கள் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் (5.700-கிலோ), 2.விமல் பாக்கு (6.528-கிலோ) மற்றும் 3. V1-பான் மசாலா (4.080-கிலோ) மொத்தம் - 16.308 கிலோ, ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story