வெளியே இருந்து கொண்டு பாஜகவிற்காக வேலை செய்யும் சீமான் வேகமாக நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும்- சிவகாசியில் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி...

வெளியே இருந்து கொண்டு பாஜகவிற்காக வேலை செய்யும் சீமான் வேகமாக நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும்- சிவகாசியில் எம்.பி  மாணிக்கம் தாகூர் பேட்டி...
வெளியே இருந்து கொண்டு பாஜகவிற்காக வேலை செய்யும் சீமான் வேகமாக நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும்- சிவகாசியில் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி.... சீமான் தமிழக மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் எனவும் விமர்சனம்
வெளியே இருந்து கொண்டு பாஜகவிற்காக வேலை செய்யும் சீமான் வேகமாக நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும்- சிவகாசியில் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி.... சீமான் தமிழக மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் எனவும் விமர்சனம் சிவகாசி ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், எஸ்.பி.கண்ணன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.மாணிக்கம் தாகூர்,, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதாகவோ திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் வெற்றிக்காக பாடுபடுவோம் சீமானும் அண்ணாமலையும் மேட்ச் பிக்ஸ் செய்யும் கேம் விளையாடி வருகிறார்கள் தமிழகம் போற்றும் இந்தியா போற்றும் தலைவர்களை விமர்சனம் செய்வதால் பத்திரிகையில் கிடைக்கும் 30 வினாடி விளம்பரத்திற்காக சீமானும் அண்ணாமலையும் செய்யும் அரசியல் தமிழக மக்களுக்கு போர் அடித்துவிட்டது வெளியே இருந்து கொண்டு பாஜகவிற்காக வேலை செய்யும் சீமான் வேகமாக நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும் தொடர்ந்து பாஜகவின் கொள்கைக்காக சீமான் செய்யும் காரியம் வருத்தம் அளிக்கிறது பெரியாரின் எண்ணங்களையும் சமூகநீதி அரசியலையும் உடைத்தெறிய வேண்டும், பாஜக தமிழகத்தில் காலூன்ற சமூக நீதி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கையை செயல்படுத்த சீமான் துணை நிற்பது சீமான் தமிழக மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்பதும் நியாயமற்றது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஒரே நாளில் குற்றவாளி கைது செய்யப்பட்டார் ஆனால் பொள்ளாச்சி சம்பவத்தில் 11 நாட்கள் கழித்து தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் அண்ணாமலை சீமான் சொல்வதை எல்லாம் நாங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் கேள்வி கேட்போம் அரசாக இருந்தாலும் சரி, முதல்வராக இருந்தாலும் சரி அதற்கான பதிலை கூற வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது, வரவேற்கத்தக்கது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தமிழக அரசு கடுமையாக எடுத்துக் கொள்கிறது என்பதற்கு இது ஒரு சான்று, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை போல் யாருக்கும் நடைபெறக் கூடாது என்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடுத்த கட்ட நடவடிக்கையாகவும் முற்போக்கு சிந்தனையாகவும் பார்க்க வேண்டும் என்றார்.
Next Story