மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டிகள் தொடங்கியது. மாநில அளவில் 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கேஎஃப்சி கால் பந்தாட்ட கழகம் சார்பில் 13 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டியில் திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர்,சேலம்,நாசரேத்,தேனி உள்ளிட்ட தமிழகத்திலிருந்து 50க்கும் அணிகள் போட்டியில் கலந்து கொண்டனர். கால்பந்தாட்ட போட்டியில் பொது பிரிவில் 40 அணிகளும், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 10 அணிகளும் பங்கேற்கின்றன. போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடைபெறுகின்றன. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகள் இரவு பகலாக மின்னொளி வெளிச்சத்தில் நடைபெறுகின்றன. முதல் பரிசாக சுழற் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு ரூபாய் 30,000, இரண்டாம் பரிசாக சுழற் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு ரூபாய் 20000, மூன்றாம் பரிசாக கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு 10 ஆயிரம் பரிசுகளாக வழங்கப்படுகின்றன. இந்த கால்பந்தாட்ட போட்டியினை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். பயிற்சியாளர்கள், நடுவர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு களித்தனர்.
Next Story