சேலம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா

சேலம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா
நீதிபதிகள் வழக்கறிஞர்கள் குடும்பத்துடன் பங்கேற்பு
தாரை தப்பட்டை அடித்து சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம். தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது இந்த நிலையில் பொங்கலை வரவேற்கும் விதமாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சேலம் வழக்கறிஞர்கள் சங்க குடும்ப பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி அவர்கள் கலந்து கொண்டு பொங்கல் பானையில் பொங்கல் இட்டு விழாவை துவக்கி வைத்தார் முன்னதாக கரகாட்டம் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் தாரை தப்பட்டை என பாரம்பரிய கலைகளை பறைசாற்றி பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story