சங்கரன்கோவில் சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

சங்கரன்கோவில் சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் தமிழர் திருநாள் தை இரண்டாம் நாள் சனி மஹா பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு திருக்கோயிலில் இன்று நடைபெற்றது. நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக இன்று மாலை 4.30 மணிக்கு, நந்தியம் பெருமாளுக்கும், சங்கரலிங்கம் சுவாமிக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சுவாமிகளுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story