நூல் குடோனில் தீ விபத்து
Komarapalayam King 24x7 |11 Jan 2025 1:06 PM GMT
அருகருகே இரண்டு நிறுவனத்தில் தீ விபத்து 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் ட்விஸ்டிங் எனப்படும் முறுக்கு நூல் மெசின்கள் வைத்து தொழில் செய்து வருபவர் குமரேசன், 56. நேற்றுமுந்தினம் இரவு 10:30 மணியளவில் 4 பேர் பணியற்றிகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, நூல் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென நிறுவனம் முழுதும் பரவியது. இதில் 10 ஆயிரம் மதிப்புள்ள 100 நூல் கோன் மூட்டைகள், இரண்டு ட்விஸ்டிங் மெசின்கள், இரண்டு கோன் வைண்டிங் ஆகியன தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது. நிறுவனம் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட டூவீலர் ஒன்றும் தீயில் எரிந்து சேதமானது. இந்த நிறுவனம் அருகே கழிவு பஞ்சு நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் சுப்பிரமணி, 40. இந்த தீ அங்கும் பரவியதில் அங்குள்ள கழிவு பஞ்சு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story