கேக் கடைக்கு சீல் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி
Komarapalayam King 24x7 |11 Jan 2025 1:10 PM GMT
உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கையின் பேரில், குமாரபாளையம் கேக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள கேக் கடையில் சுகாதாரமான முறையில் கேக் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை, என புகார் கூறப்பட்டது. இதனடிப்படையில் உணவு பாதுக்காப்பு ஆணையர் வால்வேணா உத்திரவின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் அருண் வழிகாட்டுதலில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ரங்கநாதன், லோகநாதன் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு 08:00 மணியளவில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் பொதுமக்கள் கடையின் முன் திரண்டனர். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ரங்கநாதன், லோகநாதன் கூறியதாவது: இந்த கடையில் சுகாதாரமான முறையில் கேக் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யபடுவது இல்லை என பல புகார்கள் வந்தது. மேலும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது பார்த்து, இது போல் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைக்கக் கூடாது என்று பலமுறை கூறியும், கடை உரிமையாளர் அதனை பொருட்படுத்தாமல் இருந்து வந்தார். தொடர்ந்து புகார்கள் வந்ததால், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
Next Story