பாலாற்றில் கழிவுநீர் கலப்பு அதிகாரிகள் துாக்கம் கலையுமா?
Kanchipuram King 24x7 |11 Jan 2025 1:14 PM GMT
வாலாஜாபாத்தில் குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும்கழிவுநீரை, பாலாற்றில் விடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், ராஜவீதி சாலையையொட்டி பாலாற்று படுகை உள்ளது. ராஜவீதி சாலையில், நுாற்றுக்கணக்கான கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதில், சில வீடுகள் மற்றும் பல்வேறு கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பாலாற்று படுகையில் விடப்படுகிறது. இதனால், பாலாற்றில் மண் வளம் பாதிப்பதோடு, பாலாற்று படுகையில் கழிவுநீர் தேங்கி அசுத்தமடைந்து வருகிறது. மேலும், மழை நேரங்களில் பாலாற்று தண்ணீரோடு கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசுபடுகிறது. எனவே, வாலாஜாபாத் ராஜவீதியில், பாலாற்றங் கரையை ஒட்டி உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும்கழிவுநீரை, பாலாற்றில் விடாதவாறு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் பலரும்வலியுறுத்தி உள்ளனர்.
Next Story