புதிய தொழிற்பள்ளி துவக்க விண்ணப்பிக்க அழைப்பு

புதிய தொழிற்பள்ளி துவக்க விண்ணப்பிக்க அழைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் புதிய தொழில் பயிற்சி துவங்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2025 - -26ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் துவங்குதல் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. நடப்பு 2025 - -26ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் பற்றியும் தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் 5,000 மற்றும் ஆய்வு கட்டணம் 8,000 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் பிப்., 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என , காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும், detischennai@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.
Next Story