காசநோய் இல்லாத நாமக்கல் மாவட்டம் விழிப்புணர்வு முகாம்!

திருச்செங்கோடு நகராட்சியில் ஆட்டோ வாகனங்களுக்கு காசநோய் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ வாகனத்தில் ஒட்டப்பட்டது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம், 2025ம் ஆண்டுக்குள் 'காசநோய் இல்லா நாமக்கல் மாவட்டம் உருவாக்கிட 100 நாள் காச நோய் விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகராட்சியில் ஆட்டோ வாகனங்களுக்கு காசநோய் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ வாகனத்தில் ஒட்டப்பட்டது, மேலும் ஓட்டுநர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் நோயின் அறிகுறிகள் பரவும் விதம் தடுப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியாக காசநோய் உறுதிமொழி ஏற்கப்பட்டது.இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.கார்த்திகேயன் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story