பொத்தனூர் பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பொத்தனூர் பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பொத்தனூர் பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமத்திவேலூர், ஜன.11: பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் புகையில்லா போகி கொண்டாட இப்பேரூராட்சி வீரணம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் மாணவ-மாணவிகள் தங்கள் வீடு மற்றும் அருகாமையில் உள்ள வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை பேரூராட்சி சார்பாக அமைக்கப்பட்டு ள்ள சேமிப்பு மையத்திற்கு கொண்டு வந்து வழங்கவும் மற்றும் பொது மக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளில் கழிவு செய்யப்படும் உபயோகமற்ற பொருட்கள் மற்றும் பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்ககூடாது. அபாயகரமான குப்பைகளான உடைந்த பல்புகள், காலாவதியான மருந்துகள், பயன்படாத செயற்கை வர்ண பூச்சுகள், போன்ற பொருட்களை பேரூராட்சியின் துப்புரவு முகாமில் அளிக்கவும், நச்சு தன்மை வாய்ந்த பொருட்கள் மற்றும் மறு சுழற்சிக்கான பொருட்களை தரம் பிரித்து பேரூராட்சி பணியாளர்கள் வசம் வழங்கிடவும், சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் பொருட்களை நீர்நிலைகள், வாய்க்கால் மற்றும் ஆறுகளில் கொட்டாக்கூடாது எனவும், விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, துணைத்தலைவர் அன்பரசு, பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், வரி வசூலர்கள் குணசே கரன், பன்னீர்செல்வம், துப்புரவு மேற்பார்வை யாளர் குணசேகரன், ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story