வெளிநாட்டு வேலை என ஆசை காட்டி மோசடி செய்தவர் கைது
Thanjavur King 24x7 |11 Jan 2025 1:37 PM GMT
கைது
தஞ்சாவூர் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் மோசடி செய்த நபரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே ஆப்ரகாம் பண்டிதர் நகர் பகுதி லூர்து நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சீனிவாசன் (30). இவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அரியலூர் மாவட்டம், அழிசிகுடியைச் சேர்ந்த ஜி. சுரேஷ் (41) கடந்த 2024, ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரூ. 5.19 லட்சம் வாங்கினார். ஆனால், சுரேஷ் கூறியபடி, வெளிநாட்டில் வேலை வாங்கித் தராததால், பணத்தை திரும்பத் தருமாறு சீனிவாசன் கேட்டார். ஆனால், சுரேஷ் ரூ. 1.46 லட்சம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ. 3.73 லட்சத்தை தராமல் மோசடி செய்ததாக கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து சுரேஷை வியாழக்கிழமை கைது செய்தனர்.
Next Story