பாண்டமங்கலம் அருகே காளான் பண்ணை எரிந்து சேதம்.

பாண்டமங்கலம் அருகே காளான் பண்ணை எரிந்து சேதம்.
பாண்டமங்கலம் அருகே காளான் பண்ணை எரிந்து சேதமானது.
பரமத்திவேலூர், ஜன.11: பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே அண்ணா நகர் ஜேடர்பாளையம்-பரமத்தி வேலூர் சாலையில் குடியிருந்து வருபவர் பாலுசாமி (55). இவர் கீற்றுக்கொட்டகை அமைத்து அதில் காளான் பண்ணை அமைத்திருந்தார். இந்நிலையில் கீற்று கொட்டையில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து பாலுசாமி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கீற்றுக் கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கொட்டகை எரிந்து சாம்பலானது.
Next Story