வேலூர், ஜேடர்பாளையத்தில் 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் உத்தரவு
Paramathi Velur King 24x7 |11 Jan 2025 1:43 PM GMT
அல்லாள இளைய நாயகர் பிறந்தநாள் வேலூர், ஜேடர்பாளையத்தில் 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் உத்தரவு
பரமத்திவேலூர், ஜன.11- நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பரமத்திவேலூர் தாலுகாவில் அல்லாள இளைய நாயகர் பிறந்தநாள் விழா வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் நாமக் கல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட் டங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். அப்போது சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு ஜேடர்பாளையம் மற்றும் வேலூர் போலீஸ் டு நிலைய சரகத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற் யி பனை கடைகளை மூடிட வேண்டும். அதன்படி கபிலர்ம லையில் பரமத்திசாலை, பாண்டமங்கலம் சாலை, ஜேடர்பாளையம் சாலை மற்றும் பாகம்பாளையம், சோழசிராமணி, வடகரையாத்தூர், வேலூர் நான்கு சாலை, பழைய புறவழிச் கு சாலை, சிவா தியேட்டர் முனை மற்றும் உரம்பில் கபிலர்மலை சாலை பகுதிகளில் உள்ள 10 அரசு மதுபான சில்லறை விற் பனை கடைகள் மூடப்படும். உத்தரவை மீறி கடைகளை திறந்தாலோ, மதுபானங்களை மறைமுகமாக விற்பனை செய் தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story