கோலப்பொடி விற்பனை

கோலப்பொடி விற்பனை
பொங்கல் பண்டிகை கைக்கு வண்ண, வண்ண கலர் பொடிகள் விரு,விரு விற்பனை
நாளை மறுநாள் செவ்வாய்கிழமை தைமாதப்பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை யடுத்து ஈரோடு கடைவீதி பகுதிகளில் வண்ண,வண்ண கலர் கோலப்பொடிகள் விற்பனைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பொதுவாக மற்ற மாதங்களை விட கார்த்திகை,மார்கழி,தை மாதங்களில் அதிகளவில் வீட்டு வாசலில் பெண்கள் வண்ண, வண்ண கோலமிட்டு அழகுபடுத்தி ரசிப்பது வழக்கம். இதன் காரணமாக ஈரோடு மாநகர் பல்வேறு பகுதிகளில் "திடீர் " என்று உதயமான வண்ண, வண்ண கலர்கோலப்பொடி கடையினால் பெண்கள் உற்சாகத்துடன் தங்களுக்கு பிடித்தமான வண்ண,வண்ண கலர் கோலப்பொடிகளை வாங்கிச்செல்கின்றனர். இதேபோல் ஈரோடு கொங்காலம்மன் கோயில் வீதி பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ண கலர் கோலப்பொடிகள் ரூபாய் 10ல் இருந்து கிடைப்பதால் ஏராளமான மக்கள் மகிழ்வுடன்வாங்கிச் சென்றவண்ணம் உள்ளனர். இதனால் தற்போது வண்ண வண்ண கலர் கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
Next Story