கலிக்கம் சித்த வைத்திய முகாம்
Komarapalayam King 24x7 |11 Jan 2025 3:09 PM GMT
குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச கலிக்கம் சித்த வைத்திய முகாம் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இது பற்றி சித்தா டாக்டர் கார்த்தி கூறியதாவது: உடம்பில் உள்ள நோய்களை மூலிகை சாற்றினை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்கும் சிகிச்சை கலிக்கம் சிகிச்சை எனப்படும். இதனால் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், புரை வளர்தல் சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பபை பாதிப்புகள், தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. ஐ.ஒ.எல் லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும் இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story