கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாடிய பொங்கல் விழா

குமாரபாளையம் எக்சல்பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது...
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் உட்பட தனியார் அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது., இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் (எக்சல்) பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி சிறப்பாக பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது., நடைபெற்ற பொங்கல் விழாவில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தமிழக கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் வேஷ்டி சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக கிராமிய பாடல் நடனம் கரகாட்டம் கோலாட்டம் இசை நிகழ்ச்சிகள் கும்மி போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன., மேலும் மாணவர்களுக்கிடையே உரியடித்தல் போட்டி மாணவிகளுக்கான கயிறு இழுக்கும் போட்டி போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது இதில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்,. நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் எக்ஸெல் கல்வி நிறுவனங்களில் நிறுவன தலைவர் இயக்குனர் நடேசன் கல்லூரியின் துணை தலைவர் மதன் கார்த்திக் எக்ஸல் பப்ளிக் ஸ்கூல் இயக்குனர் கவியரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கல் விழாவில் மாணவ மாணவிகள் இசைக்கு ஏற்றவாறு நடனமாடியும் கொண்டாடினேன் எழுச்சியில் கர்நாடகா ஆந்திரா கேரளா மற்றும் வெளிநாட்டுச் சார்ந்த மாணவிகள் குதுகளமாக பொங்கல் விழாவை கொண்டாடினர் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் மாணவர்கள் பலம் வந்ததுடன் ஜல்லிக்கட்டு காளைகளையும் வர்ணங்கள் பூசி அழைத்து வந்து விழாவில் கலந்து கொள்ள செய்து மகிழ்ந்தனர்.
Next Story