ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம்: முத்தரசன்
Chennai King 24x7 |11 Jan 2025 4:28 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவு காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுகழகம் வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரின் வி.சி.சந்திரகுமார் மாபெரும் வெற்றிக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பாடுபடும் என்பதை மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
Next Story