ஆடுகளை திருடிய இரு வாலிபர்கள் கைது.

ஆடுகளை திருடிய இரு வாலிபர்கள் கைது.
மதுரை திருமங்கலம் அருகே ஆடுகளை திருடிய இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கிரியகவுண்டன்பட்டியை சேர்ந்த ராமசாமி(65) என்ற விவசாயி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி வீட்டின் அருகேயுள்ள கொட்டத்தில் ஆடுகளை கட்டிவிட்டு தூங்கினார். நள்ளிரவில் கொட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடிச் சென்றனர். மறுநாள் காலையில் பார்த்த போது ஆடுகள் திருடு போனது தெரிந்தது.இது குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ராமசாமி வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் ஆடுகள் திருடியவர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து நிலையூரை சேர்ந்த சாமிதுரை (18), சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சிவராஜ்(19) ஆகியோரை போலீசார் கைது செய்து ஆடுகளை மீட்டனர்.
Next Story