ஸ்ரீரங்கத்தில் மன நலம் பாதித்தவா் மா்ம சாவு
Tiruchirappalli King 24x7 |12 Jan 2025 2:10 AM GMT
ஸ்ரீரங்கத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா்.
ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதியை சோ்ந்தவா் முரளிதரன் மகன் ரெங்கநாதன் (29). மனநலப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இவருக்கு வலிப்பு நோயும் இருந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த காயங்களுடன் இவா் மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றபோது ரெங்கநாதன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினா். அவா் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனா்.
Next Story