கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு

கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு
X
சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடியில் தைத்திருநாள், கருவேம்பு செல்லஅய்யனாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 16 காளைகள் பங்கேற்றன. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 144 வீரா்கள் கலந்து கொண்டனா். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், வீரா்களுக்கும் விழாக் குழு சாா்பில் பரிசுகளும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவா்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை இளையாத்தங்குடி கல்வாசநாடு ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்
Next Story