அணைக்கட்டில் அதிகாரிகள் ஆய்வு

அணைக்கட்டில் அதிகாரிகள் ஆய்வு
ஆய்வு
வெள்ளத்தால் சேதமான திருக்கோவிலுார் அணைக்கட்டை நீர்வளத்துறை உயர்நிலைக் குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையை தொடர்ந்து, தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருக்கோவிலுார் அணைக்கட்டு உடைந்து பெரும் அளவிலான பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை நீர்வள ஆதாரத்துறை உயர்நிலைக் குழு அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.சென்னை மண்டல நீர்வள ஆதாரத்துறை முதன்மை பொறியாளர் ஜானகி தலைமையில், திருக்கோவிலுார் அணைக்கட்டின் உடைந்த பகுதிகளை ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு செய்தனர். வெள்ள பாதிப்புகள் குறித்த பட காட்சிகள் குழுவினருக்கு காண்பிக்கப்பட்டது. முன்னதாக எல்லீஸ் அணைக்கட்டு, ஆரியூர் ஏரி, பம்பை வாய்க்கால்களில் சேதப் பகுதிகளை ஆய்வு செய்திருந்தனர். பின்னர், சத்தியமங்கலம், நந்தன் கால்வாய் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்றனர்.
Next Story