பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர் - மங்களூரு இடையே ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூரில் இருந்து நாளை (13-ந்தேதி) மாலை 3 மணிக்கு புறப்பட்டு மங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037), பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை 8.50 மணிக்கு மங்களூரு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story