ஊர்காவல் படை வீரர்களுக்கு விழுப்புரம் எஸ்.பி., பாராட்டு

X
கடந்த 1ம் தேதி புத்தாண்டு விழாவின் போது, சூர்யா கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் வந்த நபர், ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை தொலைத்து விட்டார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்காவல் படை வீரர்கள் செல்வபாண்டியன், புருஷோத்தமன் ஆகியோர் தொலைந்த நகையை தேடி மீட்டனர். பின்னர், போலீசார் உதவியுடன் நகையை பறிகொடுத்த நபரிடம் ஒப்படைத்தனர்.கடற்கரையில் பாதுகாப்பு பணியின் போது சிறப்பாக செயல்பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் செல்வபாண்டியன், புருஷோத்தமன் இருவரை யும் அழைத்து, எஸ்.பி., சரவணன், நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.மண்டல ஊர்க்காவல் படை தலைவர் நத்தர்ஷா உடனிருந்தார்.
Next Story

