கட்சிக் கரை வேட்டிகள் விற்பனை

கட்சிக் கரை வேட்டிகள் விற்பனை
கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :ஈரோடு கடைவீதிகளில் கட்சிக்கொடி, துண்டு விற்பனைக்கு குவிந்துள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி. சந்திரா குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. வருகிற 17-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18ஆம் தேதி வேட்பு மனு மீது பரிசீலணையும், 20 ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கும்.ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை ஒட்டி ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு சாலை, டி.வி.எஸ் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடிகள், கரைவேட்டி, துண்டுகள் போன்றவை விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது. இது குறித்து கடைக்காரர்கள் கூறும்போது, தேர்தலின் போது அனைத்து கட்சிகள் சார்ந்த கரைவேட்டி, துண்டு, மப்ளர், விதவிதமான வடிவ துண்டுகள், சட்டைகள், கட்சிக் கொடிகள், தோரணங்கள், கார்கள், இருசக்கர ஃபுல் பட அனைத்து வகை வாகனங்களில் கட்டும் கட்சிக்கொடி அட்டை, பிளாஸ்டிக் அட்டை அதிகம் விற்பனையாகும். தற்போது கொடி கட்டுவது, காரில் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டி உள்ளதால் அவற்றை குறைவாகவே வாங்குகின்றனர்.அதே நேரம் வி.ஐ.பி.க்களுக்கு வழங்கவும், பிரசாரத்துக்கு வரும் தொண்டர்கள், மக்களுக்கு வழங்கவும் கரைவேட்டிகள், கரை போடப்பட்ட துண்டுகள், மப்ளர்களை அதிக ஆர்வமாக வாங்குவர். இன்னும் இரண்டு நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்தல் பணிக்காக அனைத்து கட்சியினரும் வருவார்கள். அப்போது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். துண்டுகள் 20 ரூபாய் முதல் 160 ரூபாய் வரையும், கரைவேட்டி 140 முதல் 600 ரூபாய் வரையும், மாப்ளர் 110 முதல் 300 ரூபாய் வரையும், கட்சிக் கொடிகள் 20 ரூபாய் முதல் நீள, அகலத்துக்கு ஏற்ப 120 ரூபாய் வரை விலையில் உள்ளது என தெரிவித்தார்.
Next Story