கோட்டக்குப்பம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
Villuppuram King 24x7 |12 Jan 2025 4:01 AM GMT
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
கோட்டக்குப்பம் போலீசார் சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது. ரவுண்டானா அருகில் இந்த விழிப்புணர்வு பேரணியை, இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். ரவுண்டானாவில் துவங்கிய இந்த பேரணி, சறுக்கு பாலம் வரை சென்று மீண்டும் அதே இடத்திற்கு வந்தடைந்தது.பேரணியின் போது, ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை பாதுகாப்பு குறித்து பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
Next Story