ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

X
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் 36 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளக்கி பேசினார். மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர்.இதில் ஸ்ரீரங்க பூபதி நர்சிங், பார்மசி, பொறியியல் கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

