தக்கோலம் பேரூராட்சி சாதாரண கூட்டம்

தக்கோலம் பேரூராட்சி சாதாரண கூட்டம்
X
தக்கோலத்தில் பேரூராட்சி சாதாரண கூட்டம்
தக்கோலம் பேரூராட்சி சாதாரண கூட்டம், பேரூராட்சி தலைவர் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மாதேஸ்வரன், துணைத்தலைவர் கோமதி ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் சிறு மற்றும் குறு தொழில்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு தமிழக அரசால் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வருடாந்திர உரிமை கட்டணம் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை பயோ மைனிங் மூலமாக தரம் பிரிப்பு செய்யும் பணி ஆகியவைக ளுக்கு தீர்மானம், தக்கோலம் பேரூராட்சி சின்னமாபேட்டை சாலையில் இருந்து கல்லாறு பாலம் வரையிலும் மற்றும் கல் யாண மண்டப தெருவிலும் திரவக்கழிவு மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தும் பணிகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கோபி, முகமது காசிம், சிவசங்கரி, அம்சா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எழுத்தர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.
Next Story