அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறப்பு.

மதுரை அலங்காநல்லூரில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்ற பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்ற டாக்டர் அம்பேத்கர் பேருந்து நிலையம் மற்றும் வணிய வளாகத்தை இன்று (ஜன.12) காலை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா,சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story