டி.என். பாளையம் ஜே.கே.கே கல்லூரியில் நிறுவனர் விழா
Bhavanisagar King 24x7 |12 Jan 2025 6:53 AM GMT
டி.என். பாளையம் ஜே.கே.கே கல்லூரியில் நிறுவனர் விழா
டி.என். பாளையம் ஜே.கே.கே கல்லூரியில் நிறுவனர் விழா டி என் பாளையம் ஜே.கே. கே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நிறுவனர் விழா நேற்று டி.என்.பாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் ஜே.கே.கே கல்வி குழுமத்தின் அறக்கட்டளை தலைவர் வசந்தகுமாரி முனியராஜா தலைமையில் நடைபெற்றது. கல்லூரி நிறுவனங்களிலன் செயலர் கஸ்தூரி பிரியா வரவேற்றார். இதில் இந்திய ராணுவ ஆராய்ச்சி கழக முன்னாள் இயக்குனர் சதீஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது; ஐ.டி துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது இந்தியாவில் படிக்கும் 80 சதவீதம் இன்ஜினியரிங் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற நிலை மாறி தற்போது இந்தியாவிலேயே வேலை புரிந்து வருகின்றனர். இந்தியாவில் சுமார் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை புரிந்து வருகிறது. சைபர் செக்யூரிட்டியில் இ அமெரிக்கா, சீனா ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இடம்பெற்று நாலாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வகையில் நீங்களும் நல்லபடியாக படித்து இந்தியா வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும் இவ்வாறு பேசினார். நிகழ்ச்சிகள் கல்லூரி முதல்வர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story