சந்தைப்பேட்டையில் ஒரு கோடிக்கு ஆடுகள விற்பனை
Dharmapuri King 24x7 |12 Jan 2025 7:16 AM GMT
தர்மபுரி சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆடுகள் ரூ.1 கோடிக்கு விற்பனை
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை வார சந்தையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த வாரச்சந்தைக்கு சேலம்,கிருஷ்ணகிரி, நாமக்கல் மேட்டூர் மேச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கவும், விற்கவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சந்தையில் அதிகாலை நேரத்தில் ஆடுகள் விற்பனை தொடங்கி காலை நேரத்திலேயே அனைத்து ஆடுகளும் விற்பனை ஆகிவிடும். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளுக்கான வாங்க பொதுமக்கள் வியாபாரிகள் இன்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் இந்த சந்தையில் குவிந்தனர். இதேபோல் ஆடுகளை வாங்கவும் ஏராளமான வியாபாரிகள் சந்தையில் திரண்டனர்.ஆடுகள் எடைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story