பெண்ணிடம் ஆபாசமாக நடந்தவர் மீது வழக்கு
Nagercoil King 24x7 |12 Jan 2025 7:43 AM GMT
பூதப்பாண்டி
குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி கனகம் (43). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் சுயம்புலிங்கம் (46) என்பவருக்கும் குடும்ப பகை காரணமான வழக்கு பூதப்பாண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி அளிக்க கூடாது என்று கடந்த 9-ம் தேதி பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தையால் பேசி தான் கட்டியிருந்த லுங்கியை தூக்கி காட்டி பெண்மைக்கு களங்கம் விளைவித்தாக கனகம் பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் சுயம்புலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story