போக்சோ சட்டம் பாய்ந்தது
Erode King 24x7 |12 Jan 2025 7:45 AM GMT
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த வரதராஜ் மகன் சிவா, 18. ஈரோட்டை சேர்ந்த 14 வயது சிறுமி திருமண ஆசை காட்டி திருமணம் செய்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி, மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளார். தகவல் அறிந்த குழந்தைகள் நல குழுவினர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். பின்னர், போலீசார் விசாரணை நடத்தி, சிவா மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story