மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற அதிகாரி சந்திரமோகன் என்பவர் நேற்று முன் தினம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிந்தார். இதனையடுத்து, ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில், சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அரசு அதிகாரிகள், நிருபர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களை பரிசோதித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, முகாமில் இதயநோய், மகப்பேறு, சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், ரத்த அளவு, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவைகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் கூறியதாவது : ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் மட்டுமின்றி, தேர்தல் பணியில் ஈடுபட்டு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், போலீசார் என அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story