நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல்

அரசலூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திடலில் 25-பானைகளில் பொங்கல் வைத்து, அக்கிராமப் பொதுமக்களுடன்,வெகுவிமர்ச்சியாக கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கல் விழா: பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் விழாவினை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கொண்டாடுவது வழக்கம், இந்நிலையில் இந்த ஆண்டு வேப்பந்தட்டை தாலுகா, அரசலூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திடலில் 25-பானைகளில் பொங்கல் வைத்து, அக்கிராமப் பொதுமக்களுடன்,வெகுவிமர்ச்சியாக இன்று (12.01.2025)கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வானது நாம் தமிழர் கட்சி,பெரம்பலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ஹமர்தீன், மாவட்டப் பொருளாளர் ஜஸ்டிஸ் கோபிநாத் ஆகியோர் தலைமையில், பெரம்பலூர் வடக்குத் தொகுதி இணைச்செயலாளர் அரசலூர். பாலகிருஷ்ணன் மற்றும் வேல்முருகன் ஆகியோரது முன்னேற்ப்பாட்டில், மகளிர் பாசறை மாவட்ட பொறுப்பாளர்களான கோகிலா, ஜான்சிராணி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரம்பலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தங்க. இரத்தினவேல், மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் முதலாளி, உள்ளிட்ட ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, தொகுதி, பாசறை, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Next Story