புதிய பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

மதுரையில் புதிய பாதாள சாக்கடை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையில் ஒத்தக்கடை பகுதியில் குளோபல் வேலம்மாள் கல்லூரியில் நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இணைந்து அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரை வடக்கு,தெற்கு, கிழக்கு ,திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள புதிய பாதாள சாக்கடை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (ஜன.12) கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள். இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான், தெற்கு, வடக்கு தொகுதியை சேர்ந்த எம்எல்ஏக்கள் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story