வனப்பகுதியில் எரிந்து நிலையில் ஆண் சடலம்
Dharmapuri King 24x7 |12 Jan 2025 9:00 AM GMT
பென்னாகரம் அருகே முதுகம்பட்டி வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் காவலர்கள் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே முதுகம்பட்டி வனப்பகுதி உள்ளது.வனப்பகுதியையொட்டி சாலை ஓரத்தில் உள்ள தரைப்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று மாலை புகை வந்து கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாலி பர்கள் சந்தேகம் அடைந்தனர் தொடர்ந்து புகை வந்த பகுதிக்கு அவர்கள் சென்று பார்த்தபோது அங்கு ஆண் உடல் தீயில் எரிந்த நிலையில் கருகி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் இது பற்றி பென்னாகரம் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார் அவர்கள் இறந்து கிடந்த நபரின் உடலை கைப் பற்றினர் தொடர்ந்து காவலர்கள் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது உடல் சுருகி கிடந்த வாலிபருக்கு 25 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாமல் இருக்கதீவைத்து எரித்து இருப்பதும் தெரிய வந்தது. ஆனால் உடல் கருகிய |நிலையில் இருந்ததால் அவர் யார்.? எந்த ஊரை சேர்ந்தவர்..? என அடையாளம் தெரியவில்லை.இதையடுத்து அந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து இன்று காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story