சாலையோரத்தில் பெரிய பள்ளம்,விபத்து ஏற்படும் அபாயம்
Chengalpattu King 24x7 |12 Jan 2025 9:03 AM GMT
சாலையோரத்தில் பெரிய பள்ளம்,விபத்து ஏற்படும் அபாயம்
செய்யூரில் இருந்து மடையம்பாக்கம் வழியாக நெல்வாய்பாளையம் செல்லும் 8 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.இந்த சாலையை கீழச்சேரி, ஆக்கினாம்பட்டு, விரபோகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். சாலையில் இருசக்கர வாகனம், கார், லாரி, பேருந்து என, தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கடந்த பருவமழையின் போது, வீரபோகம் ஏரி உபரிநீர் கால்வாய் அருகே, வயல்வெளியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலை ஓரத்தில் இருந்த மண் அடித்துச் சென்றதால், 4 அடி பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இரண்டு கனரக வாகனங்கள் எதிரெதிரே செல்லும் போது, வாகனங்கள் பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நிலைதடுமாறும் போது பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த பள்ளத்தை மூட சாலை ஓரத்தில் மண் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story