திருமருகல் பேருந்து நிலையத்தில் வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில்

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா
நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையத்தில், திருமருகல் வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் ஜெயபாலசங்கர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் காசிஅறிவழகன், செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஹரிஹரன் வரவேற்றார். கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் குமரகுருபரன் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். விழாவில், செய்தி தொடர்பாளர் ரஞ்சித் சிங் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், துணைச் செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
Next Story