மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அலங்கார பொருட்கள் விற்பனை
Chengalpattu King 24x7 |12 Jan 2025 9:12 AM GMT
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அலங்கார பொருட்கள் விற்பனை
தை பொங்கலை கொண்டாடி வரும் தமிழர்கள், மாட்டு பொங்கல் அன்று, விவசாயத்திற்காக உழைத்த மாடுகளுக்கு விடுமுறை விட்டு, அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில், மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.அதற்காக, மாடுகளை குளிப்பாட்டி பொட்டு, குங்குமம் வைத்து, மாடுகளின் கழுத்து, கொம்பு, மூக்கில் புதிய கயிறு மாட்டி, கொம்பு சீவி அதற்கு வண்ணம் தீட்டி, மாலையில் வண்டி பூட்டி தெருவில் சுற்றி வருவர். இந்நிலையில், மாடுகளுக்குத் தேவையான கயிறுகள், மணிகள் போன்றவை செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் மற்றும் ஓ.எம்.ஆர்., சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. விற்பனையும் களைகட்டி வருகிறது.
Next Story