கோவில் வளாகத்தில் வீசி சென்ற பச்சிளம் பெண் குழந்தை
Chengalpattu King 24x7 |12 Jan 2025 9:15 AM GMT
கோவில் வளாகத்தில் வீசி சென்ற பச்சிளம் பெண் குழந்தை
செங்கல்பட்டு அடுத்த பழவேலி அருகில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிவன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பூசாரி அருண் என்பவர், வழக்கம்போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று காலை கோவிலை திறந்த போது, குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.கோவில் உள்ளே சென்று பார்த்த போது, பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை இருந்தது. இதைக் கண்ட அவர், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீசார், அந்த குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்குப் பின், குழந்தைகள் நல குழுமத்திடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை கோவிலில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story